திமுக வரவேற்பு பலகையை மர்ம நபர்கள் கிழிப்பு!! பொள்ளாச்சியில் பரபரப்பு!!

     -MMH 
     பொள்ளாச்சி கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆனைமலை வடக்கு ஒன்றியம் திவான்சாபுதூர் கலைஞர் திடலில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக நாஞ்சில் சம்பத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  

இந்நிகழ்ச்சியில் ஒன்றியம் பேரூர் கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள்,  அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கட்சியினர் வைத்த வரவேற்பு பலகையை மர்ம நபர்கள் கிழித்து விட்டனர். இது எதிர்க் கட்சியின் சதி என அக்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.  

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments