ரகசியமாக தாக்கல் செய்யப்பட்ட மாநகராட்சி பட்ஜெட், மேலும் கடனாளிகளாக சென்னை வாசிகள்!!

 

-MMH 

     தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரக்கூடிய ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என்று நேற்றைய  மாலையில் இந்திய தேர்தல் ஆணையாளர் அரோரா அறிவிப்பு செய்தார். அதற்கு முன்பாகவே தமிழகத்தினுடைய இடைக்கால பட்ஜெட்டும் தேர்தலை முன்வைத்து அறிக்கைகளாய் வந்தது.  

இந்நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத சென்னை மாநகராட்சியில் , கடந்த மூன்று ஆண்டுகளை போலவே இந்தாண்டும்  யாருக்கும் தெரிவிக்காமல் , ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மறைவாக பட்ஜெட்டை  தாக்கல் செய்திருக்கின்றனர், அதனடிப்படையில் கடந்த வருடத்தை காட்டிலும் இவ்வருடம் 554 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. 

அதாவது சென்ற ஆண்டைக்காட்டிலும் இந்த வருடம் கூடுதல் நிதிகளை ஒதுக்கியதால் ஏற்படும் பற்றாக்குறை .

1) மழைநீர்வடிகால் 20-21ல் 845.5 கோடி 21-22 1077 கோடியும், 

2)  பாலங்கள் 20-21ல்  114 கோடி , 21-22ல்  260 கோடியும் , 

3)  திடக்கழிவு மேலாண்மைக்காக 20-21ல் 40.6கோடி , 21-22ல்  134 கோடி ரூபாயும் அதாவது 300சதவிதம் அதிகமாக ஒதுக்கபட்டிருக்கின்றது .

4) மேலும் மின்வாரியத்தின் உடைய பணிகளுக்காக புதிய விளக்குகள் அமைப்பதற்காக வரக்கூடிய வருடம் 150 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இவ்வாறாக கடந்த வருட செலவுகளையும் விடவும் கொரோனா நெருக்கடியிலும் அதிக  ஒதுக்கீடுகளை செய்து மேலும் 554 கோடிகளுக்கு கடனாளிகளாக சென்னைவாசிகளை யாரையும் ஆலோசிக்காமல் உண்டாக்கியிருக்கின்றனர்,என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

-நவாஸ்.

Comments