லைசன்ஸ் வாங்க இனி ட்ரைவிங் டெஸ்ட் இல்லை! வருகிறது புதிய நடைமுறை! மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..!!

-MMH

     ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றால் ஓட்டுநர் பரிசோதனை தேவையில்லை என்ற திட்டம் விரைவில் அமலுக்கு வர இருப்பதாக சாலைப்போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கு ஏதேனும் வாகன பயிற்சி பள்ளிக்கு செல்ல வேண்டி இருக்கும். அங்கு குறிப்பிட்ட நாட்களுக்கு ஓட்டுநர் பயிற்சி எடுத்துவிட்டு அதன் மூலம் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிப்பார்கள். முதலில் LLR பதிவு செய்து வாகன பயிற்சியை தொடர்ந்து ஆர்டிஓ அலுவலர் முன்பாக வாகனத்தை ஒட்டி காட்டிய பின்னர் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.

இதற்கு நீண்ட நாட்கள் ஆகிறது. எனவே இந்த நடைமுறையை எளிதாக்கும் வகையிலும், 2025-ம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளை 50% வரை குறைக்கும் நோக்கத்திலும், ஒரு திட்டம் கொண்டு வரப்படுவதாக சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இத்திறத்திற்கான வரைவரிக்கையை தயாரித்துள்ளது. 

இதன் மூலம் வாகன ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு புதிய விதிமுறைகள் வரவுள்ளன. இந்த நடைமுறை அமலுக்கு வந்த பிறகு அனைத்து ஓட்டுநர் பயிற்சி மையங்களும் இந்த விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதாவது; வாகன பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பின்னர் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் போது ட்ரைவிங் டெஸ்டில் பங்கேற்க தேவையில்லை. பெரும்பாலானோர் ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு முறையாக சென்று பயிற்சி பெறாமலேயே பணத்தை மட்டும் கொடுத்து ஓட்டுநர் உரிமம் பெறுவதாக கூறப்படுகிறது.

அவர்கள் வாகனம் ஓட்டும் போது நிறைய சாலை விபத்துகளும் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே ஓட்டுநர் பயிற்சியை முறைப்படி முடிக்கும் நோக்கத்தில் இத்திட்டம் வர உள்ளது. வாகன பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறுவது கட்டாயம் என்பதால் வாகனம் ஓட்டும் திறன் அதிகரிக்கும் எனவும் நம்பப்படுகிறது. ஜன.29-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த வரைவு அறிக்கை சாலை போக்குவரத்துக்கு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

-S.கிரி,தலைமை நிருபர்.

Comments