திட்டியதால் வீட்டை விட்டு மாயமான சிறுவன்!!!

     -MMH

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த மணியக்காரர் வீதியில் அம்மா திட்டியதால் வீட்டை விட்டு மாயமான சிறுவன்.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த மணியக்காரர் வீதி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ், இவரது மனைவி 33 வயதான ராதாருக்மணி இவர்களுக்குத் திருமணமாகி 14 வயதில் யோகேஸ்வரன் என்ற மகன் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

இவர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்ததாகக் கூறப்படுகின்றது. தற்போது பள்ளிகள் அனைத்தும் விடுமுறை என்ற காரணத்தினால் வீட்டிலிருந்த யோகேஸ்வரன் அவரது தாய் திட்டியுள்ளார். இதனைத்தொடர்ந்து கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்ற யோகேஸ்வரன் மீண்டும் வீடு திரும்பவில்லையெனக் கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன 14 வயதான யோகேஸ்வரன் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளையவரலாறு செய்திக்காக,

-ஹனீப், தொண்டாமுத்தூர்.

Comments