பொள்ளாச்சி உடுமலை சாலையில் ஆபத்தை விளைவிக்கும் சிக்னல் ..!!

     -MMH

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு உடுமலை சாலையில் சின்னாம் பாளையம் பகுதியில்  தானியங்கி சோலார் சிக்னல் உள்ளது. தற்போது பழுது ஏற்பட்டு சாய்ந்த நிலையில் உள்ளதை நாம் காணமுடிகிறது.

எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் மேல் விழுந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுகின்றனர்.

பொள்ளாச்சியில் இருந்து உடுமலை பழனி  திண்டுக்கல் சென்னை செல்லும் பிரதான நெடுஞ்சாலை குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.

Comments