ஏசி-பஸ்களை இயக்க தமிழக அரசு அனுமதி!!

 

-MMH

     மிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, 2020, மார்ச் 25ல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல், அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. கொரோனா பரவல் குறையத் துவங்கியதும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.இதன்படி, செப்., 7 முதல், போக்குவரத்துக்கு பஸ்களை இயக்க, அரசு அனுமதி அளித்தது. எனினும், 'ஏசி' பஸ்களை இயக்க அனுமதிக்கவில்லை.

தமிழ்நாடு, அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான, 702, 'ஏசி' பஸ்கள் இயக்கப்படாததால், வருவாய் பாதிக்கப்பட்டது. இதேபோல, தனியார் பஸ் நிறுவனங்களும் பாதிப்புக்கு உள்ளாகின. எனவே, 'ஏசி' பஸ்களை இயக்க, அனுமதி அளிக்கும்படி, போக்குவரத்து கமிஷனர், அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதை பரிசீலித்த அரசு, தனியார் மற்றும் அரசு 'ஏசி' பஸ்கள், தொழிற்சாலை, பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கு இயக்கப்படும், 'ஏசி' பஸ்களை இயக்க, அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணை, நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

'ஏசி' பஸ்களை இயக்கும்போது, 'ஏசி' அளவு, 24 டிகிரி முதல், 30 டிகிரிக்குள் வைக்க வேண்டும்; வெளிக்காற்று வரவும், ஏற்பாடு செய்ய வேண்டும்.வெப்ப நிலை அளவு, 25 டிகிரி செல்ஷியசுக்கு மேல் இருக்க வேண்டும்என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,  

-V.ருக்மாங்கதன் சென்னை.

Comments