போத்தனூரில் பரபரப்பு..! டன் கணக்கில் ரேஷன் அரிசி பறிமுதல்.!!

     -MMH

கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகா மாநில ததிறகு ரேசன் அரிசி கடத்தல் கடத்தப்பட்டு வருவது வழக்கமான நிகழ்வாக உள்ளது.


இது குறித்து அவ்வப்போது ரேஷன் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் செட்டிபாளையம் பகுதியில் ஒரு தனியார் குடோனில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து ரேஷன் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது செட்டிபாளையம் – ஈச்சனாரி சாலையில் உள்ள தனியார் குடோனில் 7.2 டன் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேசன் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அந்த அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- சீனி,போத்தனூர்.

Comments