மாசாணி அம்மன் திருக்கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட கம்பம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.!!

     -MMH
     கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணி அம்மன் திருக்கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு நாளை  11.02.21 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிலையில் கொடியேற்ற நிகழ்ச்சிக்காக ஆண்டுதோறும் சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து கொடிக்கம்பம் கொண்டு வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் முறை தாரர்கள்,மாசாணி அம்மன் கோவில் நற்பணி மன்றம், மற்றும் பக்தர்கள் சர்க்கார்பதி வனப்பகுதிக்கு சென்று 80 அடி நீளம் கொண்ட மூங்கில் மரத்தை வெட்டினர். பின்பு அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கம்பத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கம்பம் ஊர்வலமாக அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் நாளை ஆழியாறு ஆற்றுப்படுகையில் கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments