சென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு.!!

     -MMH
     சென்னை பல்கலை தொலைநிலை கல்வியில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வி வாயிலாக, சான்றிதழ் படிப்பு, டிப்ளமா, இளநிலை, முதுநிலை படிப்புகள் நடத்தப் படுகின்றன.இந்தப் படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், நாளை முதல் வழங்கப்பட உள்ளன.

சென்னை பல்கலை வளாகத்தில் உள்ள, ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை மையத்தில், சனி, ஞாயிற்று கிழமைகளிலும் விண்ணப்பங்களை பெறலாம். கூடுதல் தகவல்களை, http://www.ideunom.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

- V.ருக்மாங்கதன், சென்னை.

Comments