மக்களால் பாராட்டப்படும் காவல்துறை ஆய்வாளர்..!!

-MMH 

 திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் காவல்துறை ஆய்வாளராக விராஜா கணேஷ் இவர் மேலதிகாரிகளின் ஆலோசனை பெற்று அவர்கள் சொல்லுக்கு இணங்க இப்பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக எது செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார். புகார் கொடுக்கும் மக்களிடம் அன்பாக பெற்று உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார். இப்பகுதியில் இருசக்கர வாகனம் ,கனரக வாகனங்கள் லைசென்ஸ் இல்லாமலும் ஆவணங்கள் இல்லாமால் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இருசக்கர வாகனங்களில் வருபவரிடம் கட்டாயமாக ஹெல்மட் அணிந்து வருமாறும் மாஸ்க் அணிந்து வருமாறு இருவருக்கு மேல் வரவேண்டாம் என்றும் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்ட வேண்டாம் என்றும் அறிவுறுத்தி வருகிறார். 

இதையும் மீறி வருபவரிடம் அவர்களிடம்அபராதங்கள் வசூலிக்கப்படுகிறது இதன் காரணமாக இப்பகுதியில் விபத்துக்கள் குறைந்து வருகிறது. குழந்தைகளிடம் வாகனங்களை கொடுக்கவேண்டாம் ஒவ்வொரு குடும்பங்களிலும் அவர்களுடைய உயிர் விலை மதிக்க முடியாத ஒன்றாகும் ஆகையினால் தயவு செய்து மது அருந்திவிட்டு சாலை போக்குவரத்து மதித்து நடக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் இவர் இரவு பகல் பாராமல் குமரலிங்கம் காவல் துறைக்கு கட்டுப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆகையினால் இப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் இவரை மனதார பாராட்டி வருகிறார்கள்,

-துல்கர்னி,உடுமலை.

Comments