பொள்ளாச்சியில் காந்தி சிலை அருகே திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்!!

     -MMH 

     கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று காந்தி சிலை அருகே நியூ ஸ்கீம் ரோடு பகுதியில் திமுக சார்பில்  கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மை குற்றவாளிகளை பாதுகாப்பதாக குற்றம்சாட்டி தமிழக அரசை கண்டித்தும், இதற்கு துணையாக நிற்பதாக பொள்ளாச்சி ஜெயராமனை கண்டித்தும், மேலும் உள்ளாட்சித் துறையில் அமைச்சர் எஸ் பி வேலுமணி மாபெரும் ஊழல் செய்து வருவதாக குற்றம் சாட்டி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறை கைது செய்தார்கள். 

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments