சுந்தராபுரம் பகுதியில் ரோடு பழுதடைந்ததால் மக்கள் அவதி..!!

     -MMH

கோவை மாவட்டம் சுந்தராபுரம்  பகுதியில் ஐயர் ஆஸ்பிட்டல் முருகா நகர் குடியிருப்பு பகுதிகளில் ரோடுகளை சரி செய்வதாக கூறி சாக்கடை பகுதியை சரி செய்வதாக கூறி குப்பைகளையும் மண்ணு களையும் ஆங்காங்கு தோண்டி போட்டுவிட்டு இருக்கின்றனர். 


அந்த சாக்கடை கழிவுகளை எடுக்காமல் ஆங்காங்கே போட்டிருப்பதால் வாகனங்களில் செல்வது இடையூறாகவும் விபத்து ஏற்படுவதற்கு காரணமாகவும் இருக்கிறது. மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்த தாமதம் செய்கின்றனர். இதைப்பற்றி பலமுறை கூறியும் மாநகராட்சி ஊழியர்கள் கண்டுகொள்வதில்லை.

இந்த கழிவை  அப்புறப்படுத்துவதற்கு மாநகராட்சி இடம் தொடர்பு கொண்டுள்ளோம் .

நாளைய வரலாறு புலனாய்வு இதழின் பார்வைக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.

சரியான தீர்வு கிடைக்குமா???? 

- கிரி தலைமை நிருபர்.

Comments