ஆஸ்துமா மூச்சுத்திணறல் நைட்ல மட்டும் ஏன் அதிகமா இருக்கு, இதனால் மரணம் ஏற்படுமா? உண்மை என்ன?

 

-MMH

     ஸ்துமா ஈழைநோய் என்று அழைக்கக்கூடிய இது, சுவாசப்பையை பாதிக்கும் நோய் ஆகும். மூச்சிரைத்தல், இருமல், மூச்செடுக்கவும் மூச்சுவிடவும் சிரமப்படுவது என பல அறிகுறிகள் மோசமானதாக இருக்கும். குழந்தைகளுக்கு என்று வரும் போது சுவாசப்பையை ஆஸ்துமா வாழ்நாளெல்லாம் பாதிக்கவும் செய்யலாம். முன்னேற்றத்தையும் கொடுக்கலாம். எனினும் இந்த ஆஸ்துமா தலைதூக்கும் போதெல்லாம் அதிலும் இரவு நேரங்களில் மோசமான அறிகுறிகளை உண்டாக்க காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.

ஆஸ்துமா நோயாளிகள் :

ஆஸ்துமா நோயாளிகளுக்கான அறிகுறிகள் அதிலும் மோசமானது என்றால் மூச்சு விடுதலில் உண்டாகும் பிரச்சனை தான். அதிலும் குழந்தைகள் என்றால் வாந்தி எடுக்கும் வரை இருமலை நிறுத்தமாட்டார்கள். மூச்சு விடுதலிலும் மூச்சு எடுப்பதிலும் அதிக சிரமத்தை சந்திப்பார்கள். அல்லது வேகவேகமாக மூச்சை இழுத்துவிடுவார்கள். ஆஸ்துமா பெரியவர்களுக்கும் இந்த மோசமான விளைவை உண்டாக்க செய்யும். ஆஸ்துமாவை கையாள்வது எளிதானதல்ல. சிலருக்கு இரவு நேரங்களில் இது இன்னும் மோசமடையக்கூடும். தூக்கத்தை மொத்தமாக பாதிக்க செய்யும்.

மூச்சுத்திணறல் என்பது பகல் நேரத்தை காட்டிலும் இரவு நேரங்களில் இன்னும் அதிகமாக இருக்கும். உடல் சோர்வும் எரிச்சலும் கூடுதலாக இருக்கும். பெரியவர்கள் இதை உணர்ந்தாலும் குழந்தைகள் சொல்ல தெரியாமல் அழத்தொடங்குவார்கள். இரவு நேரத்தில் ஆஸ்துமா தீவிரமாக இருப்பவர்களுக்கு தீவிரமான சிகிச்சை அவசியம் தேவை. ஏன் இரவு நேரங்களில் ஆஸ்துமா அவஸ்தைக்குள்ளாக்குகிறது என்று பார்க்கலாம். 

தூக்க நேரத்தில் ஆஸ்துமா :

தூக்க கலக்கத்தின் போது ஆஸ்துமா அறிகுறிகளை மோசமாகவே சந்திப்பார்கள். இரவு நேரத்தில் மூச்சுத்திணறல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிக்கல் என்பது பொதுவானது. ஆனால் இது அலட்சியப்படுத்தக்கூடியதல்ல. ஆபத்தானது. ஆஸ்துமா நோயாளிகள் மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்லும் போது அவர் பெரும்பாலும் இரவு நேர அறிகுறிகளை தான் .ஆஸ்துமா நோயாளிகள் பலரும் இரவு ஆஸ்துமாவை குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால் இரவு நேரங்களில் மூச்சுத்திணறலோடு கூடிய ஆஸ்துமா அறிகுறிகளை கொண்டிருந்த மரணங்கள் இரவில் தான் அதிகமாவதாக ஆய்வுகள் சொல்கிறது. தூங்கும் போது காற்றுப்பாதைகள் சுருங்குகிறது. நுரையீரலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க செய்யும். மேலும் சைனசிலிருந்து வடியும் நீர் என எல்லாமாய் சேர்ந்து இரவு நேர ஆஸ்துமாவை தூண்டுகிறது.

தூசி நிறைந்த படுக்கையறை :

உண்மையில் ஆஸ்துமா நோயாளிகள் இருக்கும் வீட்டை சுத்தமாக வைத்திருக்க மருத்துவர்கள் அறிவுறுத்துவார். அப்படி வைத்திருந்தாலும் கண்களுக்கு தெரியாத தூசிகள் படுக்கையில் தலையணையில் இருக்கலாம். அதிலும் செல்லப்பிராணிகள் வளர்க்கும் வீடுகளில் அவை அதிகமாகவே இருக்கலாம். ஒவ்வாமையை உண்டாக்கும் மூட்டை பூச்சிகள் கண்களுக்கு தெரியாமல் இருக்கலாம். இவையெல்லாமே ஆஸ்துமாவை தூண்டக்கூடியவை.

தினமும் இரவு நேரங்களில் அதிக நேரம் படுக்கையில் செலவிடுவதால் ஒவ்வாமையை உண்டாக்கும் இந்த நேரத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. வெகு அரிதாக சிலர் இரவு நீண்ட நேரத்துக்கு பிறகு அறிகுறிகளை உணர்கிறார்கள். இது அதிகாலை 3 மணிக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கலாம். இத்தகையோருக்கு மகரந்த ஒவ்வாமை இருக்கும்.

ஏசி :

குளிர்ந்த காற்று ஆஸ்துமாவை தூண்டும். இது காற்றூப்பதைகளில் ஈரப்பதத்தை இழக்க செய்கிறது. ஆஸ்துமா நோயாளிகள் ஏசி அறையில் இருக்கும் போது அங்கு தூக்கமின்மை உண்டாகும். அதிக முறை எழுந்திருப்பார்கள். குளிர்காலத்தில் இவை தீவிரமாகலாம். இரவில் குளிர்ந்த காற்று சுவாசிக்கும் போது காற்றுப்பாதையில் வெப்பம் இழக்கிறது. ஆஸ்துமா நோயாளிகள் கடுமையான உடற்பயிற்சி செய்யும் போதும் இரவு நேரத்தில் ஆஸ்துமா தூண்டப்படுகிறது.

இரவு நேரத்தில் தூண்டப்படலாம் :

ஆஸ்துமாவுக்கு தூக்கம் தொடர்பான உள் தூண்டுதல் இருக்கலாம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கிறது. ஆஸ்துமா நோயாளிகள் இரவு நேரங்களில் வேலை செய்து பகல் நேரங்களில் தூங்கும் போதும் இந்த சுவாச தாக்குதல்கள் உண்டாகலாம். தூங்கிய நான்கு முதல் ஆறுமணி நேரத்துக்குள் இந்த சுவாச பாதை மோசமடைவதாக சொல்லப்படுகிறது. உள்தூண்டுதல்கள் இதற்கு காரணமாக இருக்கலாம்.

சைனசிடிஸ் :

ஆஸ்துமா பிரச்சனை கொண்டிருப்பவர்களுக்கு சைனசிடிஸ் இருப்பது பொதுவானது. தூக்கத்தின் போது காற்றுப்பாதைகள் குறுகியதாக இருக்கும். இது காற்று அதிகரிப்புக்கு எதிர்ப்பை உண்டாக்கும். இரவு நேரத்தில் இருமலை உண்டாக்கும். இதனால் காற்றுப்பாதைகளை மேலும் இறூக்கமாக்க செய்யும். இவை சைனஸிலிருந்து அதிகமான வடிதலை உணர்திறன் கொண்ட காற்றுப்பாதைகளில் ஆஸ்துமாவை தூண்ட கூடும்.

குறிப்பு :

உங்கள் வீட்டில் குழந்தைகள் அல்லது பெரியவர்கள் யாருக்கேனும் ஆஸ்துமா இருந்தால் நீங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இரவு நேரத்தில் கோடைக்காலமாகவே இருந்தாலும் அதிக ஏசி புழக்கத்தில் படுக்க வைக்கக்கூடாது. அதோடு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை படுக்கை விரிப்பு தலையணை உறைகளை மாற்ற வேண்டும்.

வாரத்தில் ஒருமுறை இதை வெயிலில் போட்டு எடுக்கவும். படுக்கையறையில் சூரிய ஒளி பட வேண்டும். காலை வேளையில் ஜன்னலை திறந்தால் சூரிய ஒளி படுக்கையில் படுவதன் மூலம் கிருமிகள் நீங்கலாம். படுக்கைக்கு பக்கத்தில் இன்ஹேலர் வைத்திருப்பதன் மூலம் பாதிப்பு தீவிரமாகும் போது உடனடியாக பயன்படுத்தலாம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

 -ராயல் ஹமீது.

Comments