கம்பத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் உண்ணாவிரதம்.!!

     -MMH
     கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு, தனியார் மருத்துவர்கள் மத்திய அரசின் கலப்பட மருத்துவ முறையை கண்டித்து, புதன்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை அருகே மத்திய அரசின் கலப்பட மருத்துவச் சட்டத்தை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்திய மருத்துவக் கழகத்தின் கம்பம் பள்ளத்தாக்கு கிளைத் தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் பி. மகேஷ் பாண்டியன் முன்னிலை வகித்தார்.

உண்ணாவிரதத்தில் 50க்கும் மேலான அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஆண், பெண் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். மத்திய அரசு கலப்பட முறை சட்டத்தை திரும்பப் பெறக்கோரி கோஷமிட்டனர். உண்ணாவிரத முடிவில் கம்பம் அரசு மருத்துவமனை முன்பு இருந்து போக்குவரத்து சிக்னல் வரை ஊர்வலம் நடைபெற்றது. ஏற்பாடுகளை இந்திய மருத்துவக் கழகத்தின் கம்பம் பள்ளத்தாக்கு கிளை நிர்வாகிகள் செய்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஆசிக்,தேனி. 

Comments