அரசு பாலிடக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்தது சரி தான்..! மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு...!

 

-MMH

      மிழகத்தில் அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2017-ல் நடைபெற்றது. இந்த தேர்வில் 196 பேர் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தது சான்றிதழ் சரிபார்ப்பில் தெரியவந்தது. இதனால் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அந்த 196 பேரும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில் அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களைத் தவிர்த்து மற்ற தகுதியானவர்களுக்கு பணி நியமிக்கக்கோரியும் பலர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்களை விசாரித்து உயர் நீதிமன்றம், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டது சரியென உத்தரவிட்டது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

இதையடுத்து அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கூறி பலர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதை தனி நீதிபதி விசாரித்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது சரியென தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து பலர் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுக்களை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்து, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதால் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்றவர்களுக்காக தனி உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட வேண்டியதில்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டது.

-கிரி தலைமை நிருபர்.

Comments