மூலத்துறை கூட்டுறவு வங்கியின் பதவிகளுக்கான தேர்தலில் பதற்றம்!! போலீஸ் குவிப்பு!!!

-MMH 

     தமிழக கேரள எல்லைப்பகுதியான பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட  மீனாட்சிபுரத்தில் மூலத்துறை  கூட்டுறவு வங்கியின் 11 பதவிகளுக்கு இன்று மீனாட்சிபுரம்  பால் சொசைட்டி வளாகத்தில் காலை 8 மணி முதல்  தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் அதிகாரத்தை கைப்பற்றி விட வேண்டும் என ஜனதா தளம் கட்சியினருக்கும், கடும் போட்டி நிலவி வருகிறது.  

இந்நிலையில் இரு கட்சியினரும் ஓட்டு போட்டு வரும் வங்கியின் உறுப்பினர்களிடம் தங்களுக்கு ஓட்டு போடும்படி  தேர்தல் நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் செயல்பட்டதால் இரு தரப்பினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. உரிய நேரத்தில் போலீசார் விரைந்து சென்று மோதலை தடுத்தனர். 

இந்த தேர்தலில் கண்டிப்பாக மோதல் ஏற்படும் என போலீசாருக்கு தெரிந்திருந்த நிலையில் அதிகளவிலான போலீஸார் குவித்துள்ளனர். இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதை அறிந்த ஓட்டுப் போட வரும் உறுப்பினர்கள் பதட்டத்தில் உள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது. மீண்டும் பிரச்சனை எதுவும் வராமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

-M.சுரேஷ்குமார் கோவை தெற்கு.

Comments