சிங்கம்புணரி அருகே விபத்து! புதருக்குள் புகுந்த வாகனம்! ஒருவர் காயம்!!

      -MMH

நேற்று மாலை சிங்கம்புணரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி ஒரு தனியார் வணிக நிறுவனத்தின் சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. மதுரை, ஆரப்பாளையத்தைச் சேர்ந்த 28 வயதான கணேசன் என்பவர் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.


காளாப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை கடந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் இருந்த புதருக்குள் புகுந்தது. வாகன ஓட்டுனர் கணேசன் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் காயம் ஏதும் இன்றி தப்பித்தார். 

உடன் பயணித்த மணிகண்டன் என்பவர் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால் தலையில் காயம் ஏற்பட்டது. மணிகண்டன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.நல்வாய்ப்பாக எதிர்ப்புறத்தில் வாகனங்கள் ஏதும், அந்த நேரத்தில் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

- பாரூக், சிவகங்கை.

Comments