செல்வபுரம் அனைத்துஜமாத் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் மனு!!

     -MMH
     மதக்கலவரத்தை தூண்டும் விதமாகவும் முஸ்லிம்களின் உயிரனும் மேலான நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி  பேசிய கல்யாணராமன் ஜெய்சங்கர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை போன்ற(குண்டர் சட்டத்தில்) நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்பி ஆகிய அதிகாரிகளிடத்தில் செல்வபுரம் அனைத்து ஜமாத் மற்றும்  இயக்கங்கள் கூட்டமைப்பின் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது.

கூட்டமைப்பின் தலைவர் எம் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் கூட்டமைப்பின் செயலாளர் செய்யது இபுராஹிம், கூட்டமைப்பின்  பொருளாளர் எஸ் காதர்ஹூசைன், துணைத்தலைவர் (பாடகர் அப்பா) சாஹூல் ஹமீது,  ஆடிட்டர் சரீப், துணைச் செயலாளர்கள் இப்ராஹீம் மற்றும் முஹம்மதுஹனீப்  கூட்டமைப்பின்  உறுப்பினர்கள் அன்சாரி, பஷீர், ரஜாக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், தொண்டாமுத்தூர்.

Comments