முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!!!!

 

     -MMH

சிங்காநல்லுார் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், படித்த முன்னாள் மாணவர்கள் 40 ஆண்டுகளுக்குப் பின் நேற்று சந்தித்தனர். சிங்காநல்லுார் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், கடந்த 1979ல் படித்த, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நேற்று, கந்தா ஓட்டலில் நடந்தது.

30 பேர் பங்கேற்றனர் இவர்களை ஒருங்கிணைப்பாளர்கள் அமுதா, தாமரை, இளங்கோ ஆகியோர் வரவேற்றனர். 40 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இக்கூட்டம் முதன்முறையாக நடந்ததால், பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தொடக்க வகுப்பில் பாடம் எடுத்த ஆசிரியர்களின் வீட்டிற்கே நேரில் சென்று இனிப்புகள் வழங்கினர்.

பள்ளிக்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்தி தரத் திட்டமிட்டுள்ளதாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

நாளைவரலாறு செய்திக்காக,

-ஹனீப்,தொண்டாமுத்தூர்.

Comments