தன்னார்வலர்கள் நலத்திட்டங்கள் பயிற்சி!! - கையேடு வழங்கிய அமைச்சரின் மனைவி!!!

 

     -MMH

கோவை புறநகர் தெற்கு மாவட்ட தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொறுப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான நலத்திட்டங்கள் பற்றிய பயிற்சி மற்றும் பயிற்சி கையேடு வழங்குதல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இவ்விழாவை மாண்புமிகு அமைச்சர் வேலுமணியின் துணைவியார் வித்யா வேலுமணி தலைமையேற்று, தொண்டாமுத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் மதுமதி விஜயகுமார் முன்னிலை வகிக்க தொண்டாமுத்தூர் தொகுதி மகளிர் சுய உதவிக் குழு திட்ட ஆலோசகர் தீபா ராஜ்கமல் மற்றும் தொகுதி மகளிர் குழு பொறுப்பாளர் கருடா சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு பயிற்சி கையேடுகள் வழங்கினர்.

நாளையவரலாறு செய்திக்காக,

-ஹனீப்,தொண்டாமுத்தூர்.

Comments