QR code மூலம் பணப் பரிவர்த்தனையா.? எச்சரிக்கை....!
தற்போதைய நவீன காலக்கட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் என்றாகிவிட்டது.. பலரும் தற்போது ஆன்லைனிலேயே பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.. இதனால் கடந்த சில நாட்களாக சைபர் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.. இந்நிலையில் QR code மூலம் பயனர்களின் பணம் திருடப்படலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. எனவே நீங்கள் கடைகளிலோ அல்லது பெட்ரோ பம்புகளிலோ QR code மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
QR code என்பது கடை உரிமையாளர்களுக்கு பணத்தை அனுப்பும் போது பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. எனினும் இதிலும் மோசடி செய்ய முடியும் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வாட்ஸ் அப்பில் இந்த QR code-ஐ அனுப்பி மோசடிக்காரர்கள் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடுகின்றனர். சில யுபிஐ செயலிகளில் உள்ள QR code அம்சம் மூலம் பணப்பறிமாற்றம் செய்ய முடியும். அதனை ஸ்கேன் செய்து, உங்கள் பின் நம்பரை உள்ளிட்டால் மட்டும் பணத்தை அனுப்ப முடியும்.. இதுபோன்ற நேரங்களில் நீங்கள் உங்கள் வங்கி அட்டை எண், எக்ஸ்பிரி டேட், பின் நம்பர், ஓடிபி உள்ளிட்ட விவரங்களை உள்ளிட வேண்டும்.
தற்போது இந்த QR code மூலம் எப்படி மோசடி செய்கின்றனர் என்பதை பார்க்கலாம்.. மேசேஜ் அல்லது இமெயில் வழியாக மோசடிக்காரர்கள் இந்த QR code-ஐ அனுப்புகின்றனர். உங்களுக்கு லாட்டரியில் ரூ. 10,000 பரிசு கிடைத்துள்ளது என்பது போன்ற போலி செய்திகள் மூலம் அவர்கள் இதனை அனுப்புகின்றனர்.
அதற்காக நீங்கள் யுபிஐ பின் நம்பரை அனுப்ப வேண்டும் என்றும் கேட்பார்கள்.. ஆனால் உங்களுக்க் பணம் கிடைக்கும் என்று அந்த பின் நம்பரை பதிவிட்டால், உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு சென்றுவிடும்.. எனவே பெட்ரோல் பம்ப் அல்லது கடைகளில் இதுபோன்ற வழிகளில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்கும் படி சைபர் பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
-ஸ்டார் வெங்கட்.
Comments