கொரோனாவின் இரண்டாம் அலை! 100ல் 80 நபர்கள் பாதிக்க வாய்ப்பு??

 

-MMH

        கொரோனா தொற்றின் முதல் அலையே  உலக அளவில் அநேக நாடுகளை புரட்டியெடுத்து வரும் வேளையில் , தற்பொழுது  இரண்டாவது அலை சில நாடுகளில் பரவிக்கொண்டிருக்கின்றது .  அதே சமயம் நமது நாட்டில் கொரோனா முதல் அலையானது  கடந்த ஆண்டு மே முதல் டிசம்பர் வரை இருந்தது ,   ஜனவரியில் தான் கொரோனா முதல் அலை சற்று இறங்கியது. இப்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவது மிகவும் அச்சத்தை உருவாக்கிவருகின்றது.

கொரோனா முதல் அலை பரவிய நேரத்தில் நாம் சரியான நேரத்தில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால்  21 விழுக்காடு மக்கள்தான் கொரோனாவை எதிர்கொண்டனர் , மீதமுள்ள 80 % பேர்கள்  பாதிப்படைந்திடவில்லை. தற்போது இரண்டாம் அலை ஏற்படும் போது மீதமுள்ள 80 % மக்களும் பாதிப்படைந்திட வாய்ப்புகள் உள்ளன.மக்கள் கூட்டம், கூட்டமாக பொது இடத்தில் எந்தவித பாதுகாப்பு நெறிமுறைகளுமின்றி குழுமுவது வேகமான பரவலுக்கு காரணமாக அமைகின்றது , இப்படியே கழிந்துக்கொண்டிருந்தால்  மீண்டும் ஒர் முழு பொது முடக்கத்தை நோக்கிதான் நகரும்.

கொரோனா முழுமையாக நம்மைவிட்டு அகலவேண்டுமென்றால் இன்னும் 3 வருடம் ஆகும் , 100ல் 70 பேர்கள்  இந்த நோயின் தாக்கத்திற்குள்ளாவார்கள் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கி்ன்றனர்.  ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவில் சிக்கி கொண்டால் சிகிச்சை அளிப்பது என்பது மிகக்கடினம். எனவே, முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். கூட்டம் கூட்டமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

-நவாஸ்.

Comments