குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத் தொகையாக 1,000! திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!

 

-MMH

                'மிழகத்தின் விடியலுக்கான முழக்கம்' என்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திருச்சி சிறுகனூரில் நேற்று நடைபெற்றது. முதலில் மாநாடு என அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மாநாடு ரத்து செய்யப்பட்டு பொதுக் கூட்டமாக மாற்றப்பட்டது.

மாநாட்டில் பேசிய ஸ்டாலின், "நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், சமூக நீதி இவை உள்ளிட்ட 7 துறைகள் முக்கியமானவை. இந்தத் துறைகளை சீரமைப்பதே எனது முதல் பணி" என்றார். மேலும், "தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும், ரேஷன் கடைகளில் பொருட்கள் பெறும் அனைத்து குடும்பமும் இதன் மூலம் பலனடையும்" என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அப்போது அறிவித்தார்.

-பாரூக், சிவகங்கை.

Comments