101 வயதான மூதாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழும் குடும்பம்..!!

     -MMH

     கோவை மாவட்டம் போத்தனூர் ஸ்ரீராம் நகர் மேட்டு தோட்டத்தில் வசிக்கும் தெரேசா. இந்த மூதாட்டிக்கு வயதோ 101 இன்றைய காலகட்டத்தில் மனிதர்களுடைய உணவுப்பழக்கம் மாறிவிட்ட சூழ்நிலையில் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி 50 வயது 60 வயது என்று வாழ்வதே கடினமானது.

இந்த சூழ்நிலையில், நூறு வயதைத் தாண்டியும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மூதாட்டிக்கு இறைவனின் அருளும் அவர்களுடைய குடும்பத்தாரும் தான் காரணமாக உள்ளனர். ஏனென்றால் வயது முதிர்ந்து விட்டால் பெற்ற பிள்ளைகளும் சரி கூட வாழ்விலும் சரி அந்த வயதானவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதும் சரிவர பராமரிக்காமல் இருப்பதும் வழக்கமாக காணப்படுகிறது. 

இந்நிலையில், எத்தனையோ வயதானவர்களை சாலையோரத்திலும் அனாதை இல்லத்திலும் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். பெற்றோர்களின் அருமை புரியாமல் இந்த உலகத்தில் வாழும் எத்தனையோ குடும்பங்களுக்கு மத்தியில் ஐந்து தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மூதாட்டிக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடி மகிழும் இந்த குடும்பத்திற்கு பாராட்டு குவிகிறது.

-ஈஷா, கிரி.

Comments