மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் 139ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது இந்தியா!!

     -MMH

ஐ.நா. அமைப்பால் உலக மகிழ்ச்சி நாளாக கொண்டாடப்படும் மார்ச் 20ஐ முன்னிட்டு தனது "நிலையான அபிவிருத்தி தீர்வுகள் குழுவால்" கடந்த 2012 மார்ச் 20 முதல் ஆண்டுதோரும் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

இவ்வறிக்கையானது உலக நாடுகளில் வாழும் மக்களின் ' வாழ்க்கை மதிப்பீடுகள், நேர்மறை உணர்ச்சிகள் மற்றும் எதிர்மறை உணர்ச்சிகள்' ஆகிய மூன்று முக்கிய குறியீட்டுகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. 


கடந்த ஆண்டில் 140வது இடத்தில் இருந்த நமது இந்தியா , இவ்வருடம் கணக்கீட்டிற்காக எடுக்கபட்ட 156 நாடுகளில் பட்டியலில்  144வது இடமும் , மதிப்பீடு செய்யப்பட்ட 149 நாடுகளின் பட்டியலில் 139 இடங்களில் இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மகிழ்ச்சி என்னும் சொல்லே இந்தியர்களின் அகராதியிலிருந்து நீக்க பரிசீலனை செய்யும் அளவிற்கு மோடியின் ஆட்சியில் இந்தியர்களின் நிலை சென்றுக்கொண்டிருப்பது வேதனையளிக்கின்றது.

கடந்த 2010ல் உலகில் நிலவிய  மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி நேரத்திலும் இந்தியா தாக்குபிடித்து நின்றது. ஆனால் இன்றைக்கு இந்திய தேசத்தின் பொருளாதாரமும், இந்திய மக்களின் வாழ்க்கைச் சூழலும் அதலபாதாளத்தில் தள்ளப்பட்டிருப்பதும் இதே நிலைக்கு சென்றால் வரும் காலகட்டங்களில் வங்கத்தேசத்தை விட மோசமான பொருளாதார சீரழிவிற்கு  இந்தியா தள்ளப்படும் என்பது மிகப்பெரும் எச்சரிக்கை மணியாகும்! 

பெட்ரோல் விலை சதம் உயர்வு, கேஸ் விலை உயர்வு , பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்குதல், வேலை வாய்ப்பில்லாமை , சுங்கச்சாவடி உயர்வு போன்ற நிலையால் அன்றாடம் காச்சிகள்  பெரும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். இத்தகையோர்கள் தங்களின்  ஒவ்வொரு நாளையும் , ஒவ்வொரு தினத்தையும் எப்படி கழிக்கப் போகிறோம் என்ற கவலையுடன் திரிகின்றனர். 

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஒவ்வொரு பெற்றோரும் கவலையோடு நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள். வேலைக்குச் செல்பவன் அன்றைய தினம் எனக்கு வேலை இருக்குமா என துலாவும் நிலையில்  கடந்த பல வருட காலம் இருக்கும்போது எப்படி மகிழ்வு உண்டாகும்.

பெண்களுக்கெதிரான வன்முறைகள் , குழந்தைகளுக்கெதிரான தீண்டல்கள், தீண்டாமை என்ற பெயரில் ஒதுக்குதல்,  இசுலாமியர்களுக்கெதிரான வன்முறைகள் என நாளுக்கு நாள் புள்ளிவிவரங்களுடன் ஏடுகள் நிரம்பினால் மக்களின் மனங்களில் எப்படி மகிழ்வுகள் தென்படும்??

-நவாஸ்.

Comments