ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ.14¾ லட்சம் காணிக்கை..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரளாவில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். சிலர் நேர்த்தி கடனும் செலுத்துகிறார்கள்.
இந்த நிலையில், கோவிலில் உள்ள 9 காணிக்கை உண்டியல்கள் உதவி ஆணையாளர்கள் விஜயலட்சுமி (கோவை), கருணாநிதி, ஆய்வாளர் அருண்பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் திறந்து பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொண்டு எண்ணப்பட்டது.
இதில் மொத்தம் ரூ.14 லட்சத்து 83 ஆயிரத்து 308 காணிக்கையாக கிடைத்தது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.
Comments