ஸ்டாலினை வரவேற்பதற்காக வெடிக்கப்பட்ட பட்டாசு விழுந்து 2 போலீசார் உள்பட 5 பேர் படுகாயம்!!
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்பதற்காக திமுகவினர் பட்டாசுகள் வெடித்தபோது 2 போலீசார் உள்பட 5 பேர் பட்டாசு விழுந்து காயமடைந்தனர். அவர்கள் 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பிரசார செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. திமுக சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாம்பரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக அவரை வரவேற்பதற்காக திமுகவினர் சக்தி வாய்ந்த பட்டாசுகளை வெடிக்கச் செய்தனர். அப்போது எதிர்பாராதமாக அங்கு இருந்த 2 போலீசார் உள்பட 5 பேர் மீது வெடித்துச் சிதறிய பட்டாசுகள் விழுந்தது. இதில் அவர்கள் 5 பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.
Comments