போடியில் 25 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பபு!
போடியில் சனிக்கிழமை நடைபெற்ற பரிசீலனையில் 25 மனுக்கள் ஏற்கப்பட்டன. 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. போடி தொகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுக வேட்பாளா் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், திமுக வேட்பாளா் தங்க. தமிழ்ச்செல்வன், அமமுக வேட்பாளா் மு.முத்துச்சாமி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மு.பிரேம் சந்தா், மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் பெ.கணேஷ்குமாா் உள்ளிட்ட 41 போ் 51 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.
இந்நிலையில், போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் போடி தொகுதி தோ்தல் செலவின பாா்வையாளா் மானஸ் மண்டல் தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. தோ்தல் நடத்தும் அலுவலா் க.விஜயா, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆா்.செந்தில், உ.ரத்தினமாலா ஆகியோா் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தனா்.
மொத்தம், தாக்கல் செய்யப்பட்ட 51 மனுக்களில் 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் விவரம்: தங்கதமிழ்செல்வன் (தி.மு.க.), ஓ.பன்னீா்செல்வம் (அ.இ.அ.தி.மு.க), கே.ஐ.எம்.ஹக்கீம் (அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ்), அருண்குமாா் (மை இந்தியா பாா்ட்டி), பெ.கணேஷ்குமாா் (மக்கள் நீதிமய்யம், ப.கருப்பையா (பகுஜன் திராவிட கட்சி), தேனி த.கா்ணன் (அண்ணா திராவிடா் கழகம்), ச.கிருஷ்ணவேணி (அண்ணா புரட்சி தலைவா் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்), மு.பிரேம்சந்தா் (நாம் தமிழா் கட்சி), மு.முத்துச்சாமி (அ.ம.மு.க.), சுயேச்சை வேட்பாளா்கள் அப்தாஹீா், அன்பழகன், ஆனந்தராஜ், கிருஷ்ணன், குமரகுருபரன் உள்ளிட்ட 25 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஆசிக்,தேனி.
Comments