சுவாமி சிலைகளுடன் சுற்றிய 2 போ் கோவையில் பிடிபட்டனா்!!

     -MMH
     கோவையில் சுவாமி சிலைகளுடன் சுற்றித் திரிந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


கோவை அரசு மருத்துவமனை அருகே 2 போ் நேற்று இரவு சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்தனா். அவா்களின் கையில் சாக்குப்பை இருந்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து அவா்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினா்.

மேலும் அவா்களிடம் இருந்த சாக்குப் பையை பறிமுதல் செய்து சோதனை செய்தனா். அப்போது அதில் 2 சுவாமி சிலைகள் இருப்பது தெரியவந்தது. அந்த சிலைகள் வெண்கலத்தால் ஆனது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் இருவரையும் ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனா். அங்கு அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

- சீனி,போத்தனூர்.

Comments