சிவகங்கையில் முதல்வர் பரப்புரைக்கு வந்த வேன் கவிழ்ந்தது! 30 பெண்கள் படுகாயம்!

 

     -MMH

சிவகங்கையில் முதல்வர் பரப்புரைக்கு வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குளானதில் 30 பெண்கள் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாவட்டம் முழுவதும் 3 இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

   

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து சிவகங்கை அரண்மனை  வாசல் முன்பு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சார கூட்டத்திற்காக சரக்கு வாகனங்களில் கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான ஆட்கள் அழைத்து வரப்பட்டிருந்தன. பிரச்சாரம் முடிந்து அனைவரும் திரும்பி கொண்டிருந்த நிலையில் பதினெட்டாம்பட்டு கிராமத்திலிருந்து வந்திருந்த சரக்கு வேனில் 30-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கிராமத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது பெரிய கோட்டை என்ற இடத்திற்கு அருகே அவர்களது வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அங்கிருந்து அவர்களை அழைத்து வந்து சிவகங்கை மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். பெருபாலானோருக்கு தலைமற்றும் கை, கால்களில் காயமேற்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரும் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments