போலீஸ் போல் நடித்து வைர மோதிரம் பறித்த 3 பேர் கைது.!!

     -MMH
     கோவை. மார்ச்.29- போலீஸ் என கூறி தங்க நகை பட்டறை உரிமையாளரிடம் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தை பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

கோவை ஆர்.எஸ் புரம், வெங்கட் கிருஷ்ணா ரோட்டை சேர்ந்தவர் பாலசண்முகம் (வயது 42), இவர் அதே பகுதியில் டிராவல் ஏஜென்சி மற்றும் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். இவர் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான வைர மோதிரம் வைத்திருந்தார். பண நெருக்கடி காரணமாக அவர் வைர மோதிரத்தை விற்பனை செய்து தருமாறு தனது நண்பரும் நகை பட்டறை உரிமையாளர் பாலமுருகன் இடம் கொடுத்துள்ளார். 

இதுபற்றி பாலமுருகன் தனது  நண்பர்களிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் கவுண்டம்பாளையம் ஆர்.எஸ் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் 42, என்பவர் பாலமுருகனை தொடர்புகொண்டு வைர மோதிரத்தை வாங்க விரும்புவதாகவும் கடந்த 18-ஆம் தேதி மதியம் காந்திபுரம் இரண்டாவது வீட்டிற்கு வருமாறு கூறி உள்ளனர். இதை நம்பி பாலமுருகன் வைர மோதிரத்தை அங்கு தனியாக கொண்டு சென்றார். அங்கு ஆறுமுகம் வந்தார். 

இந்த நிலையில் அங்கு திடீரென வந்த 3 பேர் நாங்கள் போலீஸ் என்றும் நீங்கள் வைத்திருக்கும் கடத்தல் மோதிரமா என்று கேட்டு மிரட்டினர். ஆனால் பாலமுருகன் அந்த வைர மோதிரம் தனது நண்பர் உடையது எனக் கூறி அவர்களிடம் நகையை கொடுக்க மறுத்தார். உடனே அந்த மூன்று பேரும் திடீரென பாலமுருகன் இடம் இருந்த வைர மோதிரத்தை பறித்து விட்டு தாங்கள் வந்த ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன் அவர்களை பிடிக்க முயன்றார் ஆனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸார் வைர மோதிரம் வாங்கி வந்த ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் தனது கூட்டாளியான கணபதியைச் சேர்ந்த ஜேக்கப் (48), தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சுரேஷ் (42), உடையார் பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் (35), ஆகிய 3 பேரும் ஏற்பாடு செய்ததாகவும் போலீஸ் என்று கூறி பாலமுருகன் இடம் இருக்கும் வைர மோதிரத்தை திட்டமிட்டு பறித்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து ஆறுமுகம் அவரது கூட்டாளிகளான ஜேக்கப், சுரேஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து வைரமோதிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய கார்த்திகை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இதில் ஆறுமுகம் நகை பட்டறை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- சீனி,போத்தனூர்.

Comments