சிங்கம்புணரியில் 3 பேருக்கு கொரோனா தொற்று! பொதுமக்கள் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற சுகாதாரத்துறை வேண்டுகோள்!

 

-MMH

             சிங்கம்புணரியில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் வேகமாகப் பரவி வரும் கொரோனாவிலிருந்த தற்காத்துக்கொள்ள முகக்கவசம் கண்டிப்பாக அணியவேண்டும், சமூக இடைவெளி அவசியம் என சுகாதாரத்துறை தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், ஓரிரு வாரங்களுக்கு முன் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபதாரம் விதிக்கும் பணியில் சுகாதாரத்துறை, சிங்கம்புணரி பேரூராட்சி  செயல் அலுவலர், வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தல்கள் தொடர்ச்சியாக சிங்கம்புணரி பகுதியில் அலட்சியப்படுத்தப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சிங்கம்புணரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு ஆணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, இனியாவது சிங்கம்புணரி பகுதியில் பொது இடங்கள், பேருந்துகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைவரும் முகக் கவசம் அணியும்படியும், சானிடைசர் கண்டிப்பாக  உபயோகிக்கும்படியும், சமூக இடைவெளியை பின்பற்றி கொரானா பரவலில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொண்டு, சமூகத்தையும் பாதுகாக்கும்படி வட்டார மருத்துவ அலுவலர் நபிஷாபானு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

- அப்துல் சலாம்.

Comments