பொள்ளாச்சி தொகுதியில் 8 பேர் போட்டி..!!

 

-MMH

                              பொள்ளாச்சி தொகுதியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம்  எட்டு வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதியில் அ.தி.மு.க., - தி.மு.க., - ம.நீ.ம., - நாம் தமிழர் - அ.ம.மு.க., - பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் மனுத்தாக்கல் செய்தனர். மொத்தம், 24 பேர், 36 மனுக்கள் தாக்கல் செய்தனர் பரிசீலனையில், எட்டு பேர் மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன. மீதம் உள்ள, 28 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

நேற்று மாலை, 3:00 மணி வரை மனுக்கள் 'வாபஸ்' பெற அவகாசம் வழங்கப்பட்டது. யாரும் 'வாபஸ்' பெறாததால், வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு பணி நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் நடந்தது.தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்திநாதன் தலைமை வகித்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தணிகைவேல் மற்றும் அதிகாரிகள் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

சுயேச்சை வேட்பாளர்கள் முத்துகுமாரசாமி சாந்து முகமது இருவரும், 'மின்கம்பம்' சின்னம் வேண்டும் என்றனர். இதனையடுத்து, குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யலாம் என அதிகாரிகள் முடிவு செய்தனர். சாந்து முகமது, வேறு சின்னம் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். அதன்பின், அவருக்கு மாற்று சின்னம் ஒதுக்கப்பட்டது.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி, அங்கீகரிகக்கபட்ட மாநில கட்சி, பதிவு செய்யப்பட்ட கட்சிகள், இதர கட்சிகள், சுயேச்சை என, வரிசைப்படி இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது.அதன்படி, ஆறுச்சாமி (பகுஜன் சமாஜ் கட்சி) - யானை; பொள்ளாச்சி ஜெயராமன் (அ.தி.மு.க.,) - இரட்டை இலை, வரதராஜன் (தி.மு.க.,) -- உதய சூரியன், சதீஸ்குமார் (ம.நீ.ம.,) -- டார்ச்லைட், சுகுமார் (அ.ம.மு.க.,) -- குக்கர், லோகேஸ்வரி (நாம் தமிழர் கட்சி) -- கரும்பு விவசாயி சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சுயேச்சை வேட்பாளர்கள் சாந்து முகமது - கோட், முத்துகுமாரசாமி -- மின்கம்பம் ஒதுக்கப்பட்டது. வேட்பாளர்கள் அடையாள அட்டை, வேட்பாளர்கள் கையேடு உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி.


Comments