சிங்கம்புணரியில் அதிமுக தேர்தல் அலுவலகம்! பொன்மணி.பாஸ்கரன் திறந்து வைத்தார்!

 

-MMH

         தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் திருப்பத்தூர் தொகுதியில் இரு பிரதான கட்சிகளுக்கிடையே பிரச்சாரம் அடிக்கும் வெயிலையும் தாண்டி அனல் பறந்து வருகிறது. திமுக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தேர்தல் அலுவலகம் திறந்த நிலையில், தற்போது அதிமுகவும் சிங்கம்புணரியில் தேர்தல் அலுவலகம் திறந்துள்ளது. திண்டுக்கல் சாலையில் அதிமுக கூட்டணி கட்சிகள் இணைந்து அமைத்துள்ள திருப்பத்தூர் சட்டமன்ற தேர்தல் அலுவலகத்தை மாவட்ட கவுன்சில் குழு தலைவர் பொன்மணி.பாஸ்கரன் நேற்று மாலை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிங்கம்புணரி அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் திருவாசகம், நகர செயலாளர் சொ.வாசு, நகர துணைச் செயலாளர் குணசேகரன், மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.கருப்பையா, முன்னாள் நகர செயலாளர்கள் மைலன் மற்றும் ராஜமோகன், முன்னாள் கவுன்சிலர்கள் கக்கன் ராஜா, பிரபு, சதீஷ், நித்யா, பேரவைச் செயலாளர் புருஷோத்தமன், மகளிர் அணி ஒன்றிய பொறுப்பாளர் தவச்செல்வி மற்றும் இளமொழி, கே.நெடுவயல் ஊராட்சி மன்றத்தலைவர் சரவணன்,

மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது மாற்று கட்சிகளிலிருந்து விலகிய பலர் பொன்மணி.பாஸ்கரன் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments