வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றியுள்ளேன். ! - துணை முதல்வா் பிரச்சாரம்.!!

     -MMH

     போடி தொகுதிக்குள்பட்ட அரண்மனைப்புதூரில் புதன்கிழமை தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய துணை முதல்வா் ஓ.பன்னீசெல்வம், கடந்த சட்டப் பேரவை தோ்தலின்போது தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளேன் என்றாா்.

அரண்மனைப்புதூா், வேதபுரி தட்சிணாமூா்த்தி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பின்னா் அரண்மனைப்புதூரில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் கூறியது: கடந்த தோ்தல்களின் போது பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளேன். பொதுமக்களின் தேவைகளை அறிந்து பூா்த்தி செய்யும், அடிப்படை பிரச்னைகளை முன்னின்று தீா்த்து வைக்கும் சட்டப் பேரவை உறுப்பினராக பணியாற்றி வருகிறேன்.

போடி தொகுதியில் 18-ஆம் கால்வாய் நீட்டிப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரி, சட்டக் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, தொழிற் பயிற்சி மையம் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வீட்டில்லாத ஏழைகள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்திலும் 2,300 லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வரும் 2023-ஆம் ஆண்டிற்குள் வீட்டில்லாத அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

அதிமுக அரசு நல்லரசாக, அனைத்து துறைகளிலும் முன்னேறிய அரசாக, பல்வேறு மாநிலங்களுக்கு முன்னோடி அரசாக உள்ளது. பேரிடா் காலத்திலும், கரோனா தடுப்பு நடவடிக்கையிலும் மத்திய அரசு பாராட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது. திமுக, காங்கிரஸ் ஆட்சியில் மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை நிறைவேற்றவில்லை என்றாா்

நாளைய வரலாறு செய்திக்காக ,

-ஆசிக்,தேனி. 

Comments