சென்னையை வளர்ச்சிபடுத்த மெட்ரோ இரண்டாம் கட்டம்!!

 

-MMH

           ந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னை நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்துவருகின்றது. வேலையின் நிமித்தமாகவும் , சுற்றுலாவிற்காகவும், நாள்தோரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நாடிவரும் கேந்திரமாக சென்னை திகழ்கின்றது.

பெருநகர மாநகராட்சி என்னும் நிலையினை எட்டியுள்ள சென்னைக்கு ஆக மிகப்முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துவருவது போக்குவரத்தாகும் , அதிலும் சாலை பொதுபோக்குவரத்து  , ரயில், பறக்கும் ரயில்,  என  இருந்தாலும் போதிய பூர்த்தியினை இவை செய்திடவில்லை , இதனால் மெட்ரோ ரயில் திட்டம் கடந்த பத்தாண்டாண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியின் போது அடிக்கல் நாட்டப்பட்டு அதிமுக ஆட்சியின் போது பெயர்மாற்றம் செய்து துவக்கபட்டது.

ஏற்கனவே முதலாம்கட்ட திட்டத்தில் திருவொற்றியூர் - வண்ணாரபேட்டை -  மீனம்பாக்கம் வரை ஒரு வழித்தடம், சென்ட்ரல் - கோயம்பேடு -  மீனம்பாக்கம் என இன்னொரு வழித்தடம் என இரண்டு தடங்களில்  செயல்பட்டுவருகின்றது. தற்போது  மாறிவரும் நகரவளர்ச்சியின் காரணமாக இரண்டாம் கட்ட திட்டமும் செயல்வடிவத்தில் வகுக்கப்பட்டு வருகின்றன அதன்படி மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் 3 வழித்தடங்களில் (மாதவரம் - சோழிங்கநல்லூர், மாதவரம் - பூந்தமல்லி - சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி) என 118.9கி.மி பாதையில் 128 நிறுத்தங்களுடன் மொத்தம் 61843கோடிகளில்  திட்டம் இறுதிவடிவத்தில் உள்ளது. 2026 ஆம் ஆண்டில் இதற்கான திட்டம் முடிவடையும் என எதிர்பார்க்கபடுகின்றது .இதன் மூலம் சென்னை உடைய  போக்குவரத்து நெரிசல்  மிகவும் குறையும் என  எதிர்பார்க்கலாம்.

-நவாஸ்.

Comments