சிங்கம்புணரியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்! ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்!
சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக துவக்கியுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் திமுகவும் அதிமுகவும் நேரடியாக களம் காண்கின்றன. சிங்கம்புணரியில் நேற்று முன்தினம் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்த நிலையில், நேற்று அதிமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஊராட்சி கவுன்சில் தலைவர் பொன்.மணி பாஸ்கர் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் திருவாசகம், தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகன் மற்றும் நகரச் செயலாளர் வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் பாலமுருகன், பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில், பாஜக ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன், கண்ணையா, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் காளாப்பூர் மலைராஜா, அதிமுக மாவட்ட அவைத்தலைவர் ஏவி.நாகராஜன், ஒன்றிய குழு சேர்மன் திவ்யா பிரபு,
மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பிரபு, அதிமுக நகர துணைச் செயலாளர் குணசேகரன், அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் காளாப்பூர் சசிகுமார், பேரவைச் செயலாளர் புருஷோத்தமன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் ரவீந்திரன், முன்னாள் நகரச் செயலாளர்கள் மைலன் மற்றும் ராஜமோகன், முன்னாள் கவுன்சிலர்கள் கக்கன் ராஜா, பிரபு, சதீஷ், நித்யா, ஏவி.சரவணன், மகளிர் அணி ஒன்றிய பொறுப்பாளர் தவச்செல்வி மற்றும் இளமொழி மற்றும் கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.
Comments