தமிழ் திரைப்படத்துறையில் குணசித்திர நடிகராக திகழ்ந்த தீப்பெட்டி கணேசன் உடல் நலக்குறைவால் காலமானார்!

 

-MMH

                  மிழ் படங்களான ரேனிகுண்டா, நீர்ப்பறவை, தென் மேற்கு பருவக்காற்று, பில்லா - 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன். தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாத காரணமாக வறுமை நிலையில் இருந்த அவரது குடும்ப வாழ்க்கை, கடந்த ஆண்டு கொரோனா பொது முடக்க கட்டுப்பாடுகள் நிலவிய காலத்தில் மேலும் மோசம் அடைந்தது. இதனால் தனக்குத் தெரிந்த புரோட்டா மாஸ்டர் தொழிலில் ஈடுபட்டு வந்த கணேசன். அவ்வப்போது சிறு சிறு தொழில்களிலும்  கவனம் செலுத்தி வந்தார். அவரது நிலையை அறிந்த திரைத்துறையை சேர்ந்த திரைப்பட பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகர் விஷால், ஸ்ரீமன், பூச்சி முருகன் உள்ளிட்டோர் உதவி செய்தனர்.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், மதுரை இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு உயிர் பிரிந்து இறந்துள்ளார். அவரது உயிர் பிரிந்த தகவலை, பிரபல திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

-நவாஸ்.

Comments