அம்மாபேட்டை பகுதிகளில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வாக்கு சேகரிப்பு!!

     -MMH

     பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை பேரூராட்சியில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக அருகில் உள்ள கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை ஒன்றியத்தில் தி.மு.க. கூட்டணி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்  ஜவாஹிருல்லா வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். 

புளியகுடி, கருப்பு முதலியார் கோட்டை, அருந்தவபுரம், கம்பர்நத்தம், சூளியக்கோட்டை, திருபுவனம், அருமலைக்கோட்டை, செண்பகபுரம், ராரா முத்திரைகோட்டை, நல்லவன்னியன் குடிகாடு ஆகிய கிராமங்களில்  வாக்காளர்களை சந்தித்து  வாக்குகள் சேகரித்தார். மேலும் தி.மு.க மற்றும் கூட்டனி கட்சியினர்  சாலியமங்கலம், கோவிலூர் பகுதியில் வாக்குகள் சேகரித்தனர் .

தொடர்ந்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது:- "தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். வாக்காளர்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் முத்திரையிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று தமிழக முதல்-அமைச்சராக  மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பது உறுதி. அம்மாபேட்டை பேரூராட்சியில் மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதாக வாக்களித்துள்ளார்.


மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருடன்  தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் , காங்கிரஸ் கமிட்டி தலைவர் லோகநாதன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பி.எஸ்.குமார், தியாக. சுரேஷ்குமார்,  மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொறுப்பாளர் ஹாரூன் ரஷீது, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் ரஹமத் அலி,  . ம.ம.க  கோவை மாவட்ட இளைஞரணி செயலாளர்  ருசி மைதீன் அவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

- V.ராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments