மிதக்கும் நிலையில் எவர்கிரின் கப்பல்!! - சீராகும் நிலையில் கப்பல் போக்குவரத்து!!

 

     -MMH

எகிப்து  நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் ஆசியாவின் மத்திய தரைக் கடல் பகுதியையும், ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர் வழித்தடமாக உள்ளது. 193 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த முக்கிய கால்வாய்  1869 ம் ஆண்டு திறக்கப்பட்டது. 

இந்த கால்வாய் வெட்டப்பட்டதிலிருந்து ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றி செல்ல வேண்டிய கப்பல்கள்  இந்த கால்வாயை பயன்படுத்தி மிக எளிதாக பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயண தூரத்தை குறைத்து  மத்திய தரைக்கடல் பகுதியை வந்தடைய முடிந்தது. இந்த கால்வாய் போக்குவரத்தின் மூலமாக பல பயன்கள் கிடைத்தன. குறிப்பாக எரிபொருள் சிக்கனம் மற்றும் உணவு பொருள் சிக்கனம் ஆகியவை கிடைத்தன. இந்த சூயஸ் கால்வாய் வழியாக சுமார் 12% உலக வர்த்தகம் நடைபெற்றது. 

இந்த நிலையில் சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் களில் ஒன்றான எவர் கிரின் என்ற சரக்கு கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை சூயஸ் கால்வாயும், இரண்டு பக்க கரைகளில் மோதி சிக்கிக் கொண்டது . இதனால் அந்த வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 40 கோடி  அமெரிக்க டாலர் மதிப்புள்ள சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த ராட்சத சரக்கு கப்பலை கால்வாயின் கரையில் இருந்து நகர்த்தி மீண்டும் மிதக்க  வைப்பதற்கான முயற்சிகள் கடந்த 5 நாட்களாக நடந்து வருகின்றன .

ஆனால் இந்த முயற்சிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை . கப்பலை மீண்டும் நீரில் மிதக்க வைக்கும் முயற்சியில் பத்து இழுவைப் படகுகளும், 2 அகழ்வு  இயந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

இந்த சூழ்நிலையில் ஏழாவது நாளான  இன்று  எவர்கிரீன் கப்பல் மிதக்கும் நிலைக்கு வந்துள்ளதாக  அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த  நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் உலக நாடுகளின் போக்குவரத்து அமைச்சகங்கள் சற்று ஆறுதல் அடைந்து விட்டது என்றே கூறலாம். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-ராஜசேகரன்.

Comments