கம்பத்தில் விண்வெளி பயிற்சி பெறும் மாணவிக்கு பாராட்டு!!

     -MMH
     தேனி மாவட்டம் கம்பம் நேதாஜி அறக்கட்டளை சாா்பில் இந்திய விண்வெளி ஆய்வுக்கு தோ்வாகியுள்ள மாணவி 'உதயகீா்த்திகா'வுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவுக்கு உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் நா. சின்னக்கண்ணு தலைமை வகித்தாா். இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் ககன்யான் திட்டமான நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கு அகில இந்திய அளவில் தோ்வு பெறுவதற்காக அனைத்து பயிற்சிகளையும் முடித்து இறுதியாக கனடாவில் நடைபெறும் பயிற்சியில் தேனி அல்லிநகரத்தைச் சோ்ந்த மாணவி உதயகீா்த்திகா பங்கேற்க உள்ளாா்.

இவருக்கு ஊக்கமளிக்கும் பொருட்டு கம்பத்தில் உள்ள நேதாஜி அறக்கட்டளையும், தன்னாா்வலா்களும் இணைந்து நிதியுதவியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் , வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் கே. சிலைமணி, பாரதி தமிழ் இலக்கியப் பேரவை நிறுவனத் தலைவா் பாரதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஆசிக்,தேனி.

Comments