சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் எதிரொலி!
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் எதிரொலி! நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை! கலெக்டர் ராமன் நேற்று புது பஸ் ஸ்டாண்டில் திடீர் ஆய்வு!
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. பொதுமக்கள் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மாவட்ட கலெக்டர் ராமன் நேற்று புது பஸ் ஸ்டாண்டில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயணிகள், போக்குவரத்து பணியாளர்கள் முழுமையாக மாஸ்க் அணிந்துள்ளார்களா என பார்வையிட்டார். மேலும் மாஸ்க் அணியாமல் வந்தவர்களுக்கு, உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டதுடன், மாஸ்க் வழங்கி, அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து அங்குள்ள நகைக்கடை, டூவீலர் ஷோரூம் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு சென்ற கலெக்டர் ராமன், பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிவதுடன், வாடிக்கையாளர்களையும் மாஸ்க் அணிய அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், வியாபாரிகள், வணிக நிறுவனத்தினர், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது, சுகாதார பணிகள் துணை இயக்குநர் சுப்பிரமணி, மாநகர் நல அலுவலர் பார்த்திபன் உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
-Ln.இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.
Comments