தேர்தலை முன்னிட்டு வால்பாறை சட்டசபைக்கான கட்டுப்பாட்டு அறை!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை தாலுக்கா அலுவலகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வால்பாறை சட்டசபைக்கான கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாட்டு அறையை 04253 282100 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் மேலும் இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில்:-
"இந்த கட்டுப்பாட்டு அறையில் பகலில் மூன்று அதிகாரிகளும் இரவில் இரண்டு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும்.
பணம்,மதுபானம், பரிசுப்பொருட்கள்,போஸ்டர், பேனர் வைப்பது உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் அதேபோல பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஒரு செயலி உள்ளது அதன் பெயர் 'சி- விஜில்' இந்த செயலியில் பெறப்படும் புகார்களை கண்காணிக்க தனியாக ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.", என்று தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம்.
-M.சுரேஷ்குமா,ர் கோவை தெற்கு.
Comments