காளாப்பூர் சுற்றுப்புற கிராமங்களில் அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ் வாக்கு சேகரிப்பு!!

 

      -MMH

சிங்கம்புணரி அருகே காளாப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மருது.அழகுராஜ் பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார்.

சிங்கம்புணரி வடக்கு ஒன்றிய பகுதிகளில் பொதுமக்களிடம்  வாக்குகளை சேகரித்தார். அப்போது பொதுமக்களிடம் மருதுஅழகுராஜ் பேசியதாவது, 'மீண்டும் அதிமுக அரசு அமைந்தால் வீட்டுக்கு வீடு வாஷிங்மெஷின், வருடத்திற்கு 6 சிலிண்டர் இலவசம், பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய்.

கேபிள் டிவி கட்டணம் கிடையாது.

சோலர் அடுப்பு, கூட்டுறவு கடன்கள் ரத்து' போன்ற அதிமுகவின் வாக்குறுதிகளை விளக்கினார்.

15 வருடமாக திருப்பத்தூர் பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. ஆகையால் இந்த ஒருமுறை எனக்கு வாய்ப்பு தாருங்கள் என காளாப்பூர் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். உடன் மாவட்ட குழு தலைவர் பொன்மணி.பாஸ்கரன், அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் திருவாசகம், சிங்கம்புணரி நகரச் செயலாளர் சொ.வாசு, கே.நெடுவயல் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பாஜக கூட்டனி கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மருது.அழகுராஜ் செல்லும் இடமெல்லாம் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மருதிப்பட்டி, அரளிப்பட்டி, எஸ்.வி.மங்கலம் மற்றும்  காளாப்பூரில் குத்துவிளக்கேற்றி பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

- அப்துல் சலாம், திருப்பத்துர்.

Comments