சேலம் - அரக்கோணம் இடையே சிறப்பு ரயில்! பயணிகள் உற்சாகம்!!

 

-MMH

     சேலம் - அரக்கோணம் இடையே, வரும், 17 முதல், சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சேலம் - அரக்கோணம் இடையே, திங்கள் முதல், வெள்ளி வரை, தினமும் பயணியர் ரயில் இயக்கப்பட்டது. கொரோனா சூழலால், கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது. தற்போது, அந்த ரயில், சிறப்பு ரயிலாக, வரும், 17 முதல் இயக்கப்பட உள்ளது. இதில், எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணத்தில், முன்பதிவின்றி பயணிக்கலாம் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.

Comments