சிங்கம்புணரி நகர காங்கிரஸ் தலைவர் கட்சி தாவல்! புதிய தலைவர் நியமனம்!!

     -MMH
     சிங்கம்புணரி வட்டார காங்கிரஸ் தலைவராக பணியாற்றிய பொடிக்கடை பழனிவேல்ராஜன், நேற்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மருதுஅழகுராஜ் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

 இதனை அறிந்த சிங்கம்புணரி காங்கிரஸ் பொறுப்பாளர்கள், மாவட்ட தலைமைக்கு தகவல் தந்ததால், உடனடியாக மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் புதிய நகரத் தலைவர் நியமனம் குறித்து ஆய்வுக் கூட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் சிங்கம்புணரி காங்கிரசிற்கு புதிய நகரத் தலைவராக இராம.தாயுமானவன் நியமிக்கப்பட்டார். இவர் திருப்பத்தூர் முன்னாள் எம்எல்ஏ, சிங்கம்புணரியை சேர்ந்த இராம.அருணகிரியின் மகன் ஆவார். காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி இராம. தாயுமானவனுக்கு நகரத் தலைவருக்கான நியமன ஆணையை வழங்கினார்.

இதையடுத்து அவர், ப.சிதம்பரம் முன்னிலையில் சிங்கம்புணரி நகரத் தலைவராக பதவி ஏற்றார். அவருக்கு ப.சிதம்பரம் உள்பட நிர்வாகிகள் அனைவரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

- அப்துல் சலாம், திருப்பத்துர்.

Comments