பூ வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி.!!

     -MMH

      கோவை:தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதியன்று நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு மக்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி பூ மார்க்கெட் பகுதிக்கு சென்று பூ வியாபாரிகளிடம் ஆதரவுகளை திரட்டினார். அவரிடம் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.  வியாபாரிகளிடம் கைகொடுத்து ஆதரவுகளை திரட்டிய வேட்பாளர் சிவசேனாபதியிடம் வியாபாரிகள் அவர்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்பொழுது அவர்களிடம் பேசிய அவர் நாங்கள் வெற்றி பெற்று உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்றும் தெரிவித்தார். 

முன்னதாக அவரை வரவேற்ற திமுக தொண்டர்கள் அவருக்கு திருவள்ளுவர் சிலை பரிசாக கொடுத்தனர். அப்பொழுது நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ஒருவர் அவருக்கு பாசியினால் ஆன  மாலையை அணிவித்து எங்களது ஆதரவு உங்களுக்குத்தான் என்று கூறியது அங்குள்ளவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

- சீனி,போத்தனூர்.

Comments