மன்னார்குடியில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி! மலை போல் காட்சியளித்த போட்டியாளர்கள்!

-MMH

               திருவாரூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகம் மற்றும் எம்ஆர்டி மல்டி ஜிம் இணைந்து நடத்திய 'மிஸ்டர் திருவாரூர் 2021' போட்டி கடந்த ஞாயிறன்று மாலை கூட்டுறவு அர்பன் பேங்க் நகராட்சி மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட பளு தூக்கும் சங்க தலைவர் துரை வீரையன் அவர்கள் தலைமை தாங்கினார். அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அசோக் குமார் வரவேற்புரை வழங்க, அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மோகன் ஜி மற்றும் திருவாரூர் மாவட்ட வலு தூக்கும் சங்க செயலாளர் எம்.அன்வர்தீன் மற்றும் மன்னார்குடி வருவாய் ஆய்வாளர் எம்.மாதவராஜ் முன்னிலையில் மன்னார்குடி டிஎஸ்பி பி.இளஞ்செழியன் அவர்கள் போட்டியினை துவக்கி வைத்தார்.  

அதனைத் தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்.ராசுப்பிள்ளை மற்றும் சமூக ஆர்வலர் டி.ஜீவானந்தம் மற்றும் திருவாரூர் மாவட்ட அமெச்சூர்  ஆணழகன் சங்க எஸ்.ராம் கோவிந்த் மற்றும் திருவாரூர் மாவட்ட  அமெச்சூர் ஆணழகன் சங்கத்தின் த.பார்த்திபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இப்போட்டியில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள 20க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி நிலையங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் 8 உடல் எடைப்பிரிவில் போட்டியில் பங்கு பெற்றனர். இவர்களில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த வீரர்களுக்கு மெடல், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இறுதியாக நடைபெற்ற மிஸ்டர் திருவாரூர் 2021 சாம்பியன் ஆப் சாம்பியன் போட்டியில் ஆர்.ரவீந்திரன் முதலிடத்தையும், கே.நித்திய ராஜன் இரண்டாம் இடத்தையும், எம்.சத்யராஜ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 8 உடல் எடைப்பிரிவில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு மார்ச்சு மாதம் 27, 28 தேதிகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் பங்குபெற வாய்ப்பு வழங்கப்பட்டது.

இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திருவாரூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்க தலைவர் ஏ.பி அசோகன் அவர்கள், பி.ஜி பாரதி - செயலாளர் மண்டல விவசாய அணி அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகம், ஆர்.பாலா - மண்டல அமைப்புச் செயலாளர் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம், பி.ஞானசேகரன் - மண்டல விவசாய அணி அனைத்து இந்தியா சட்ட உரிமைகள் கழகம், சிறப்பு விருந்தினர் எஸ்.எம்.டி.கருணாநிதி - வர்த்தக சங்க அமைப்பு செயலாளர், என்.சுப்பிரமணியன் - நிறுவனர் மற்றும் தலைவர் அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகம், ஆர். ஜி.கே.மிதுன் குமார் - ஆர். ஜி. கே. பெட்ரோல் பங்கு உரிமையாளர் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துரை அளித்தனர். 

இறுதியாக திருவாரூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்க செயலாளர் அ.முகமது ரபிக் நன்றியுரை வழங்கினார். போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருவாரூர் மாவட்ட அமெச்சூர்  ஆணழகன் சங்கம் மற்றும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் மற்றும் எம்.ஆர்.டி. மல்டி ஜிம்&ஸ்போர்ட்ஸ் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

-ரைட் ரபீக், மன்னார்குடி.

Comments