தமிழகத்தில் கோடை காலம் எப்படி இருக்கும்? வானிலை மையம் கூறும் தகவல்...!

-MMH

             வரும் கோடைக் காலத்தில், பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை, தென் மாநிலங்களில், இயல்பை விட குறைவாக இருக்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் முதல், மே மாதம் வரையிலான கோடைக் காலத்துக்கான கணிப்புகளை, இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது: மார்ச் முதல், மே மாதம் வரையிலான கோடைக் காலத்தில், வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு மாநிலங்களில், பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட அதிகமாக இருக்கும்.

கிழக்கு பிராந்தியம் மற்றும் மத்திய பிராந்தியத்தின் மேற்கு பகுதிகளிலும், இயல்பை விட அதிகமாக இருக்கும். சத்தீஸ்கர், ஒடிசா, குஜராத், மஹாராஷ்டிராவின் கடலோரப் பகுதிகள், கோவா மற்றும் ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில், பகல் நேர வெப்பநிலை, இயல்பை விட அதிகமாக இருக்கும்.

அதே நேரத்தில், தென் மாநிலங்கள் மற்றும் அதையொட்டியுள்ள மத்திய பிராந்தியத்தில், பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட குறைவாக இருக்கும்.இமயமலையை ஒட்டியுள்ள மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்கள், மத்திய பிராந்தியத்தின் மேற்கு பகுதி, தென் மாநிலங்களில், இரவு நேர குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பை விட அதிகமாக இருக்கும். மற்ற பகுதிகளில், இது இயல்பை விட குறைவாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-சுரேந்தர்.

Comments