தமிழக கேரள எல்லைப் பகுதியில் விபத்து!! - விரைந்து வந்து செயல் பட்ட இரு மாநில தீயணைப்புத் துறையினர்கள்.!!

     -MMH
     பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த  தமிழக கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் அருகே தமிழகத்திற்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான மஞ்சி மில் பல வருடங்களாக இயங்கி வருகிறது. 

இந்நிலையில் நேற்று மதியம் மில்லில் தீப்பற்றிக் கொண்டது. வேலையாட்கள் தீப்பற்றியது கவனிக்காததால் தீ வேகமாக அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. மேலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் தீப்பற்றி எரிய தொடங்கியது.

இதனையடுத்து பொள்ளாச்சி  தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில்  கேரளா  தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களும் வந்தனர். இரு மாநில தீயணைப்பு வீரர்களும் பொது மக்களின் உதவியோடு தீயை கட்டுப்படுத்த பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இவர்களுக்கு துணையாக தமிழக காவல் துறையினரும், கேரளா காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தால் உயிர்பலி எதுவும் ஆகவில்லை என்றாலும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வாகனங்களும் உபகரணங்களும் தீயில் கருகின. 

மேலும் தீ  எப்படி பிடித்தது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தால் அப்பகுதி பல மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments